
யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்த நபர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம். என்னும் கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவதுடன், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீதியோரம் மயங்கிய நிலையில் காணப்பட்டிருக்கின்றார். இதனையடுத்து அவரை மீட்ட தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்தபோதும்
அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கான தடையங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்