
யாழில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில், நேற்றிரவு கஞ்சாவினை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோ 160 கிராம் உள்ளடங்கிய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.



குறித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து பேருந்தினை சோதனை செய்தபோது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
அவரை பளை பொலிஸ் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.