
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.