பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலையின் அதிபர் ஆளுநரின் கடிதத்திற்கு அஞ்சாது நேர்மையாகச் செயல்பட்டதன் காரணமாக வேறு வழி இன்றி தனது அலுவலகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை சந்தேகம் மிகுதியால் வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ ஆளுநர் செயலகத்திலிருந்து இடமாற்றம் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருவது,
வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ்சின் கையெழுத்துடன் நிர்வாக நடைமுறைகளை மீறி மத்திய கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் வெட்டு புள்ளியை பெறாத ஒருவரை நியமிக்குமாறு பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
குறித்த கடிதத்தை பார்வையிட்ட பாடசாலை அதிபர் பழைய கேள்வி பணிப்பாளருக்கும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் ஆளுநரின் கடிதத்தை ஏற்க முடியாது இது மத்திய அரசுக்குட்பட்ட பாடசாலை என்பதால் கல்வி அமைச்சின் வெட்டுப் புள்ளிக்கு உற்பட்டே மாணவர்களை இணைத்துக் கொள்ள முடியும் எனப்பதில் அனுப்பினார்.
இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதம் கல்வித் திணைக்களம் ஊடாக பகிரப்பட்ட நிலையில் ஊடகங்களிலும் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது.
இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் பாடசாலை அதிபருடன் மோத முடியாத நிர்வாக சிக்கலில் சிக்கிய காரணத்தால் குறித்த கடிதத்தை தனது அலுவலக உத்தியோகத்தர் வெளிவிட்டாரா? என்ற சந்தேகத்தில் அவரை ஆளுநர் செயலகத்திலிருந்து இடமாற்றம் வழங்கியுள்ளாரா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆளுநர் பாடசாலைக்கு அனுப்பிய கடிதம் கல்வித் திணைக்களம் ஊடாக வடமாகாண கல்வி அமைச்சு வரை சென்ற நிலையில், இதை அறிந்து கொள்ளாத ஆளுநர் தனது அலுவலக உத்தியோகத்தர்களை சந்தேகப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
குறித்த கடிதம் ஆளுநர் செயலகத்திற்கு ஒரு பாடமாக இருக்கின்ற நிலையில் இவ்வாறு முறையற்ற கடிதப் பரிமாற்றங்கள
இடம் பெறும்போது அதிகாரிகளே குறித்த கடிதங்களை வெளிவிடும் நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.