தலைவர் சிவா 100 எனும் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் எதிர் கட்சி தலைவருமான சிவசிதம்பரம் அவர்களது 100 வது பிறந்த நாள் நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழக மைதானத்தில் விழாக்குழு தலைவர் பேராசிரியர் கு.மிகுந்தன் தலமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக அமரர் சிவசிதம்பரம் அவர்களுடைய உருவ படத்திற்க்கு மலர் மாலையினை வகரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் உபாலி பொன்னம்பலம் அணிவித்தார். தொடர்நது ஈகை சுடரினை அவரது புதல்வி திருமதி நிராஞ்சலி தேவராஜ் அவரது மருமகள் கமலினி சத்தியேந்திரன் ஆகியோர் ஏற்றினர்.
மங்கல விளக்கினை சட்டத்துறை பேராசிரியர் வீ.ரீ.தமிழ் மாறன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம், பேராசிரியர் சி.சிவலிங்கராசா, இந்தியாவிலிருந்து வருகைதந்த சென்னை உயர்நீதி மன்ற சட்த்தரணி, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட பலர் ஏற்றினர்.
தொடர்ந்து இறைவணக்கம் தமிழ் மொழி வாழ்த்து இடம் பெற்று மணணுக்காகவும், மக்களுக்காவும் இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
வரவேற்ப்பு உரையினை அமரர் சிவசிதம்பரத்தின் உதவியாளராக இருந்த தங்க முகுந்தனும், தலமை உரையினை நிகழ்வின் தலைவருமான பேராசிரியர் கு.முகுந்தன் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து நினைவுரைகளை கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் செயலாளர் இ.இராகவன் நிகழ்த்தியதை தொடர்ந்து அமற் சிவா எனும் நூலை அவரது மகள் நிராஞ்சலி தேவராஜ் விருந்தினர்களுக்கு வழங்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து ரகூக் கக்கீம் சிறப்பு உரை நிகழ்த்தினார்.