
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் அனைவரது கண்களையும் கலங்கச் செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை) சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்ற இளைஞன் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் உயிருடன் இல்லாததால், இன்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் தேகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.

குறித்த பட்டத்தினை தாயாரிடம் கையளித்த போது தாயார் கண்ணீர்மல்க பட்டச் சான்றிதழை பெற்றதுடன் இச் சம்பவமானது அங்கிருந்தவர்களின் கண்களை கலங்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
