
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் இவ்வாரம் பல இலட்சம் ரூபா உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வகையில் கடந்த 19/07/2023 அன்று திருகோணமலை மாவட்டம் – செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக ஏழாவது கட்டமாக ரூபா 100,000 நிதியும், திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் உள்ள திருக்கரசை மாநகரம், பெரும்பான்மை இனத்தவரால் கையகப்படுத்தும் நிலையில் உள்ள கங்குவேலி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தின் புனரமைப்பிற்காக ரூப 150,000 நிதியும்,
முல்லைத்தீவு மாவட்டம் – நெடுங்கேணி, சேனைப்பிலவு கிராமத்தில் அமைந்துள்ள உமையவன் அறநெறிப் பாடசாலையின் 154 மாணவர்களுக்கு 116,000 ரூபா பெறுமதியான சீருடைத் துணிகளும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான தையல் கூலியாக ரூபா 32,000 நிதியும் வழக்கப்பட்டுள்ளது.


மேலும் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள முத்து ஐயன்கட்டு, கனகரத்தினபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நம்பிக்கை விநாயகர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக ரூபா 150,000 நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

மலையகப் பிராந்தியம் – இங்கிரியகல பிரதேசத்தில் வசிக்கின்ற ஊடகவியலாளரின் கோரிக்கைக்கு அமைவாக மருத்துவ தேவைக்காக ரூபா 50,000 நிதியும் அவரது வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டது.
இதே வேளை நேற்றைய தினம் 21/07/2023 வாராந்த நிகழ்வாக ஆச்சிரம மண்டபத்தில் இரா.செல்வவடிவேல் ஆசிரியரின் மகாபாரதச் சொற்பொழிவும், இடம் பெற்றதுடன்
வட்டுக்கோட்டை யா/துணவி அ.மி.த.க பாடசாலை முதல்வர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக 25,000 ரூபா பெறுமதியான எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.



குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக வழங்கிவைத்ததுடன் நேற்றைய வாராந்த அரங்க நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் கலரும் கலந்து கொண்டனர்.