
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
குறித்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில் 22/07/2023 நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
ஏற்பாட்டாளரும், கவிஞரும், பாடல் ஆசிரியருமான யாழ் மருதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடக்க நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.
மங்கல விளக்கினை வெற்றிலைக்கேணி பிள்ளையார் ஆலய பிரதம குரு த.யோகசம்மந்த குருக்கள். வடமராட்சி கிழக்கு பிரபல அண்ணாவியார் க.அருந்தவச்செல்வன், மூத்த அறிவிப்பாளர்கள் கி.திருமாறன், பிறேம் அறக்கட்டளை நிறுவுனர் சதீஸ்குமார் , கலாசார நிலைய உத்தியோத்தர் சுபாஸ்கரன், மருதங்கேணி கிராமசேவையாளர் வி.சுபேஸ்குமார், ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் றஜீவன், பாடகர் ஜெஎம்ஸ் றெஜி, யாழ் மருதம் கலாசார பெஎரவை ஆலைசகர் த.அகிலன், ஏற்பாட்டாளரும் பாடலாசிரியருமான கவிஞர் யாழ் மருதன், உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. வரவேற்புரையை சமூகவியல் துறை மாணவி ஈழமகள் வல்லரசி நிகழ்த்தினார்.
ஆசியுரைையினை வெற்றிலைக்கேணி மண்டலாய் பிள்ளையார் ஆலய குரு யோகசம்மந்த குருக்கள், அங்குரார்பண உரையை ஏற்பாட்டளரும் கவிஞரும் பாடல் ஆசிரியருமான யாழ் மருதன் நிகழ்த்தினார் . தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் நடனம் வாழ்த்துரைகள், பாடல்கள் கவிதைகள் என்பன இடம்பெற்றன.

இதேவேளை வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதற்குரிய நிதியினை பிறேம் நினைவு அறக்கட்டளை நிதியம் அன்பளிப்பு செய்திருந்தது.
இன்றைய இந் நிகழ்வில் வடமாகாணத்திற்கு உட்பட்டு கலந்து கொண்டிருந்த கலைஞர்கள் அனைவரும் பரிசல்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
வட மாகாணத்திற்க்கு உட்பட்ட கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள்,, கலை ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







