
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் நீரியல்வள திணைக்களம் மற்றும் கடற்படையுடன் மக்கள் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடித்ததாக தெரிவிதவது பெருந்தொகையான மீன்களுடன் மீனவர்கள் சிலர் கடலில் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின் வெற்றிலைக்கேணி கடற்பததை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவ் வேளையில் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களாலவ பிடிக்கப்பட்ட மீன்களை மறைமுகமாக வியாபாரிகளை அழைத்து விற்பனை செய்து அதில் வரும் நிதியை நீரியல்வள திணைக்கள அதிகாரிகளும், கடற்படையும், பங்கிடுவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.


இதனால் அங்கு கைது செய்யப்பட்ட மீனவர்களது உறவுகளுக்கும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்குமிடையில் பரஸ்பர வாய்த் தர்க்கம் எற்பட்டுள்ளது.
குறித்த விடையத்தை ஒழிப்பதிவு செய்த ஊடகவியலாளர் ம.திலக்ஸ் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன் அவரை நீிரியல் வளத்துறை அதிகாரிகள் புகைப்படமும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் பல இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் விற்கப்படும் அதே சமயம் இந்த பணங்கள் சட்டரீதியாக அரசாங்கத்திற்கு செல்லாமல் இவர்களே பங்கிட்டு கொள்வதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இவ்வாறான சட்ட விரோத தொழில்களில் தென் பகுதி மீனவர்கள் ஈடுபட்டபோது பலகாலமா பார்த்துக் கொண்டிருந்த கடற்படை மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் குறித்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் அதே தொழிலில் ஈடபடுகின்ற போது கடற்படை மற்றும் நீரியல் வளத்துறை நடவடிக்கை எடுப்தும் அவர்களை துன்புறுத்துவதும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது.
அண்மையில் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்படை மீனவர்களை மிக மோசமாக நடாத்துவதாக பகிரங்கமாக பல மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிட தக்கது.


