
கிளிநொச்சி பளை போலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமானது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பல லச்சம் பெறுமதியான இயந்திரங்களும், தும்புக்கள் மற்றும் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தும்புதொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பாக பளைபோலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.