நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அரசாங்கத்தினால் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதும் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தலைமையில் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று வாழைச்சேனை மீன்பிடி துiறுமுகம், பிரதேச பாடசாலைகள் உட்பட மூன்று மத்திய நிலையங்களில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த தடுப்பு ஊசி ஏற்றும் பணியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கொரோனா நோய் அபாயம் மற்றும் தடுப்பூசி ஏற்றுவது அவசியம் தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.