
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை இடம்பெறவுள்ள சர்வகட்சி கூட்டம் மற்றும் 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.