நாட்டின் பொருளாதாரத்தையும், சேவைகளையும் சீராக்க வேண்டுமானால் மக்கள் வரி செலுத்துவதை தவிர்க்க கூடாது – வடக்கு ஆளுநர்

ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சிடம் இணைந்து வருமானத் திணைக்களமும்  எற்பாட்டில்
வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது வகையில் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என்னும் கருப்பொருளிலான நிகழ்வு நேற்று (25.07.2023) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள தனியார் மண்டபத்தில், ஜனாதிபதி செலகத்தின் புதிய வரிக்கொள்கை மற்றும் ஐ.எம்.எவ் வின்  வடமாகாண பணிப்பாளர் M.R குமராரத்ன தலைமையில் நடைபெற்றது.
இவ் தெளிவூட்டு நிகழ்வு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் பிரச்சனையாக இருப்பது, நாட்டில் ஈட்டப்படுகின்ற வருமானத்தினை விட எங்களால் செலவீடு செய்யப்படுகின்ற தொகை அதிகமாக இருக்கிறது.  கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் நிதி நெருக்கடி சூழல் எற்பட்டுள்ளது.
பொதுவாக நாட்டில் வருமானம் ஈட்டக்கூடிய மூன்று துறை காணப்படுகின்றது. வருமான வரி, சுங்கவரி, மதுவரி ஆகிய மூன்று துறைகளும் பிரதான வருமானம் ஈட்டக்கூடிய துறைகளாகும். இதில் 57 வீதமான வருமானத்தினை சுங்கத்திணைக்களம் பெற்றுக்கொடுக்கின்றது. மற்றைய 43 வீதமான வருமானத்தினை மதுவரி, வருமான வரி மற்றும் ஏனைய  திணைக்களங்கள் ஈட்டிக்கொடுக்கின்றன.
இதில் காணப்படுகின்ற குறைபாடு என்னவென்று கூறுவதாக இருந்தால், வருமான வரி  செலுத்துவர்களில் நாட்டின் மொத்த குடித்தொகையில் குறைவானவர்கள் தான் வரியினை செலுத்திக்கொண்டு இருக்கின்றனர்.
வருமான வரியினை திருத்தவேண்டிய தேவை இலங்கை நாட்டிற்கு இருந்தது. அந்தவகையில் தான் வரிக்கொள்கை திருத்தப்பட்டிருக்கிறது. வரி செலுத்த வேண்டியவர்கள் வரியினை செலுத்தாமல் இருக்கும் போது நாட்டின் சுமையினை அரசு சுமக்கவேண்டியிருக்கின்றது.
உலகிலே இலவச மருத்துவம், இலவச கல்வி என்ற இரு துறைகளை அரசாங்கம் கொண்டிருக்கிறது. இருந்தாலும் வடமாகாணத்தில் சுகாதார அமைச்சின் செயலாளராக கடந்த 2019 ஆண்டின் சில மாதங்களின் நான் பதவி வகித்தபோது  சுகாதார அமைச்சுக்கு மாதாந்தம் 10 பில்லியன் ரூபா செலவாக இருந்தது.
வருமானவரி என்பது நாட்டுக்கு கட்டாய தேவையாக இருக்கின்ற போது வருமானம் வரிசெலுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.
எமது அண்மைய நாடான இந்தியாவில் வரி செலுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இப்போது பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுவருகின்றனர்.
பெருமளவானோர் நினைக்கின்றனர் சுங்க திணைக்களத்தின் வரி 87 வீதமாக இருக்கின்றது என. ஆனால் சுங்க திணைக்களத்தினால் வருகின்ற பெரும் தொகையினை வெளிநாட்டுகளுக்கு அனுப்பிவிட்டு சிறுதொகையினை தான் வரியாக நாங்கள் பெற்றுக்கொள்ளுகின்றோம்.
உதாரணமாக வாகனத்தினை கொள்வனவு செய்வதாக இருந்தால் வெளிநாட்டுக்கு 10 மில்லியன் ரூபா பணத்தினை அனுப்பிவிட்டு அதில் இருந்து ஒரு மில்லியன் ரூபா பணத்தினை வரியாக பெற்றுக்கொள்ளுகின்றோம். இதனால் நாட்டில் உள்ள டொலர்கள் எல்லாம் வெளிநாட்டுகளுக்கு செல்லுகின்ற நிலை எற்பட்டிருக்கின்றது. இதனால் தான் கடந்த வருடம் இறக்குமதி தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தையும், சேவைகளையும் சீராக்கவேண்டுமானால்  மக்கள் வரி செலுத்துவதை தவிர்க்ககூடாது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் தற்போது புலம்பெயர்ந்த நாட்டில் வசித்துவருகின்றனர். புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்களுக்கு தெரியும் மற்றைய நாடுகளில் இந்த வரி என்பது எப்படி பெரும் பகுதியாக கணிக்கப்படுகிறது என்று.
எமது நாட்டின் வரி செலுத்துதல் என்பது இலகுவான முறையாகவும், பலர் அந்த வரியில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், தவிர்த்துக் கொள்ளவும் கூடிய நிலை காணப்படுகிறது. எனவே நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியிலும், இந்த நாட்டில் நாங்கள் பல தேவைகளை பெற்றுக் கொள்பவர்கள் என்ற ரீதியிலும் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வதற்காக வரிக் கொள்கையில் இணைந்து கொள்ள வேண்டும் – என்றார்.
இவ் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், இலங்கை மத்தியவங்கியின் பிரதிப் பணிப்பாளர் ப.பரணவிதான, புதிய வரிக்கொள்கை மற்றும் ஐ.எம்.எப் வின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர், உதவி பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட மேலதிக செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews