வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க செயலாளர் கலாரஞ்சினி கருத்து தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கு தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி ஒன்று நீர் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் இனங்காணப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது அந்தப் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியை அழிக்கும் நோக்கில் தற்பொழுது அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்து, எதிர்வரும் 28 07.2023ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் என பல்வேறு தரப்பினரும் இணைந்து பூரண கர்த்தாலிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்றைய தினம் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை பாரிய ஆரப்பாட்டம் ஒன்றையும் 28.04.2023 அன்றைய தினம் முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், போக்கவரத்து ஏற்பாடுகள் அவ்வந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இன்றைய தின ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அழைப்பு விடுத்தனர்.