
கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 475 அடி மதில் இன்று பாடசாலை சமூகத்திற்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 

பழைய மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரின் நிதி பங்களிப்புடன் பாதுகாப்பு மதில் அமைக்கப்பட்டது.
குறித்த கட்டுமானத்தின் நினைவுக்கல்லை வைத்திய கலாநிதி எம்.குகராஜா திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
