
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுவின் செயற்பாடுகள் உலகம் அறிந்தது இன்று உலகமே வாய்விட்டு சிரிக்கின்ற மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் எனவே இந்த கூட்டத்தில் பங்குபற்றுகின்ற அரசியல்வாதிகள் அனைவரும் அறநெறி வகுப்புக்களில் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒழுக்க நடைமுறையை சிறுவர்களுடன் இருந்து கற்றுவிட்டு கூட்டத்தை நடாத்துமாறு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிபிள்ளை மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செங்கலடியிலுள்ள தமிழர் உணர்வாளர் அமைப்பின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடக மாகாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இலங்கை புவிச்சரவியல் அளவைகள் சுரங்கங்கள் திணைக்களத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 50 தொடக்கம் 75 இலச்சம் வரையில் வருமானம் கிடைத்து வந்தது ஆனால் கடந்த 2 வருடங்களாக குறித்த திணைக்களத்தினால் ஆற்றுமண் கிறவல் அகழ்வதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த புவிச்சரவியல் அளவைகள் சுரங்கங்கள் திணைக்களத்தால் சகல நடவடிக்கையும் நிறுத்தப்பட்ட பின்பும் மாவட்டத்தில் மணலுக்கே கிறவலுக்கே எந்தவிதமான தட்டுப்பாடு இருக்கவில்லை அதேவேளை இந்த மணல் கிடைக்கவில்லை என அபிவிருத்திகள் நிறுத்தப்படவில்லை இந்த நிலையில் இந்த தடைகளை தாண்டி இந்த ஆற்று மண் கிறவல்களை விநியோகித்தவர்கள் யார்? இது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?
அப்படியானால் அரசாங்கத்துக்கு கடந்த முறை நாள் ஒன்றுக்கு கிடைத்த 50 தொடக்கம் 75 இலச்சம் ரூபா வரையிலான வருமானம் யாருக்கு சென்றது இதனை ஆராயவேண்டியவர்கள் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஏன் என்றால் ஒருவர் ஒரு பிடி மண்ணையும் எடுக்க விடமாட்டேன் எனவும் இன்னும் ஒருவர் மாற்றுகருத்தை கூறுகின்றார்.
அவ்வாறாயின் உங்கள் தடைகளை தாண்டி இந்த மண்ணை விநியோகித்தவர்கள் யார்? இதயை யார் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் இந்த கேள்விக்கு அதிகாரிகள் விடைகாண முயலுங்கள்.
இந்த நிலையில் மணலுக்கான செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர் சாதாரனமாக 3 கீப் ஒரு ரிப்பர் மண் செங்கலடி பிரதேசத்தில் 32 ஆயிரம் ரூபா இது திட்டமிட்டவகையில் ஒரு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி குறித்த நபர்கள் ஆதாயம் பெற்றுக் கொள்கின்றனர். எனவே மாவட்டத்தில் வகை தொகையின்றி ஆற்;று மணல் ஏராளமான திருட்டுக்கள் நடந்தது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதேவேளை இந்த மணல் நெருக்கடியால் சாதாரன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே ஒரு கடுமையான கட்டுப்பாடான ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி ஆற்று மணலை மாவட்டத்தில் இருந்து வெளியே செல்லாதளவிற்கு மாவட்ட மக்களின் தேவைக்கு அளவான மண்ணை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை சம்மந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.
அதேவேளை அதிகார பரவலாக்கல் இணைந்த வடகிழக்கில் எதிர்பார்க்கின்றோம் என்பதுடன் பிரிந்திருக்கும்; கிழக்கில் அதிகார பரவலாக்கல் தமிழர்களுக்கு கத்தி முனையாக இருக்கும் ஏன் என்றால் ஒரு மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டால் அப்போது அதிகார பரவலாக்கல் பெற்றிருந்தால் கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது ஒரு கத்தி முனைதான்.
இந்த நிலையில்; காணி பொலிஸ் அதிகாரம் இருக்கும் வேளையில் கிழக்குமாகாண சபை தேர்தல் நடாத்தப்பட்டு தமிழர்கள் அல்லாத இடத்தில் அதிகாரம் சென்றால் என்ன நடக்கும் என சிந்தித்து பாருங்கள் இது ஒரு விடையம். பிரிந்திருக்கும் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் அதிகாரம் கிடைக்கபெற்று அங்கு பிள்ளையானே அல்லது சாணக்கியனே முதலமைச்சராக இருந்தால் எத்தனை பேர் சிறையில் இருப்பார்கள் சிந்தித்து பாருங்கள் இது தேவை தானா?
அதிகாரம் உரியவர் கையில்தான் இருக்க வேண்டும் இவர்கள் போன்ற இடத்திலே இன்று இரா. சாணக்கியனுக்கு பொலிஸ் அதிகாரம் இருந்தால் பிள்ளையான் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் அவ்வாறு பிள்ளையனுக்கு பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் கற்பனை செய்து பாருங்கள் சிறையில் இடம் கூட கிடையாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மதில் போன் புனை ஏன் என்றால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொலிஸ், காணி அதிகாரங்கள் தரமாட்டேன் என்ற டயஸ் அழகப் பெருமையை தமிழ் தசிய கூட்டமைப்பு ஆதரித்தது அங்கே அவரை ஆதரித்துவிட்டு இங்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் காணி பொலிஸ் அதிகாரத்தை கேட்பது புரியவில்லை,
இந்த நிலையில் மாவட்டத்தில் புதிய மதுபானசாலை திறப்பு தொடர்பாக ஒவ்வொரு அரசியல்வாதியும் நான் சம்மந்தம் இல்லை அனுமதிக்கமாட்டோம் என்றால் அதற்கு விண்ணப்பித்தவர்கள் யார்? அவர்கள் இரவு பகலாக சில குறிக்கப்பட்ட சில அரசியல் கட்சிகளில் காரியாலயத்திலே நிரந்தரமாக இருப்பவர்கள் இதனை என்னுடைய ஆட்கள் இல்லை என சொல்லி யாராவது எங்களுடன் சவாலுக்கு உட்பட முனைந்;தால் நாங்கள் நிருபிக்க தயாராக இருக்கின்றோம் என்றார்.