
யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வட மேற்க்கு முருகன் கோவிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 68வது ஆண்டை முன்னிட்டு இன்றைய தினம் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் அறிவகம் சன சமூக நிர்வாகத்தினர், கிராம மக்கள், மற்றும் அயல் கிராம மக்கள் ஆர்வத்துடன் குருதி கொடை அளிப்பதை அவதானிக்க முடிகின்றது.
