
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டகளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அடாத்தாக அபகரித்த மக்களது காணிகளில், அனுமதியின்றி இந்த விகாரை அமைக்கப்பட்ட நிலையில் மக்களது நிலங்களை மீள வழங்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



