
பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரப்பலகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் மரப்பலகைகள் இருப்பது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இன்றைய தினம் விசேட அதிரடிபடையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வீடொன்ரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல லட்ச ரூபாய் பெறுமதியான முதிரை பலகைகள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 01.08.2023 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதுடன் தடையப்பொருட்கள் நாளை 02.08.2023 நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
