
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கத்திற்க்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
சட்ட முறையற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டமைக்காகாவே அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு எதிர்வரும் 07/08/2023 அன்று வழக்கிற்க்காக சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

