
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முற்பகலளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழத்திற்கு அண்மையில் உள்ள விடுதி ஒன்றிலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த மாணவி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி எனவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.