சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீரைத் திறுந்துவிடுமாறு கோரி எம்பிலிப்பிட்டிய பஸ் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் 11 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் குறித்த நீர்த்தேகத்திலிருந்து நீரை திறந்துவிடாவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விவசாயிகள் சார்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து உரிய தீர்ப்பு கிடைக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் போராட்டம் தீவிரமடையும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, மின்னுற்பத்திக்கு தேவையான நீரை சேமிப்பதற்காக சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவளவ பகுதி விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகத்தை அரசாங்கம் தடை செய்துள்ளதாகவும் இதனால் தென்மாகாணத்தில் விவசாயத்தில் ஈடுபடும் 65 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான அஜித் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.