
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, கறுக்காய் பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நடந்து சென்ற வயோதிபர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் 1990மூலமாக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


