
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் மருதகலை கலைமன்றத்தின் பௌர்ணமி விழா நேற்று 05/08/2023 சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
அம்பன் பிங் பொங் விளையாட்டு கழக மைதானத்தில் மருதகலை கலைமன்ற தலைவர் கபில்ராம் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டு பஞ்ச புராணம் ஓதுதலுடன் பௌர்ணமி விழா ஆரம்பமானது.
தொடர்ந்து அம்பன் பெரியதம்பிரான் பிள்ளையார் ஆலய குரு ஆசியுரை வழங்கினார்.
வரவேற்பு உரையினை மருதகலை கலை மன்ற உறுப்பினர் குபிதா ஜெயந்தன் நிகழ்த்தினார்.

தலமை உரையினை மருதகலை கலை மன்ற தலைவர் கபில்ராம், நிகழ்த்தினார்.

தொடர்ந்து சிறப்புரைகளை அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் பகலவன் பாடசாலை முதல்வர் சோ.வாகீசன், முன்னாள் வடமராட்சி கிழக்கு கலாசார உத்தியோகஸ்தர் செல்வசுகுணா, ஆகியோர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து வரவேற்பு நடனம், பாட்டு, நடனம், கவிதை, கோலாட்டம், மிருதங்க இசை, நாடகம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.




