வடக்கு கிழக்கு மக்கள் மலையக மக்களோடு கைகோர்ப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய்ய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக மாஆட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது மலையக மக்களுடைய தலைமன்னாரிலிருந்து மாத்தளயய வரையான நடை பயணம் தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
எதிர்வரும் 12ஆம் திகதி அந்த நடைபவனி மாத்தளைை அடையும் என்று கூறப்படுகிறது.
பல்வேறு சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பேரணிக்கு தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றது.
ஒரு வலுவான உயர்ந்த ஒரு பேரெழுச்சியாக அந்த எழுச்சு காணப்படுகிறது.
ஆரம்பத்தில் மலைய அரசியல் கட்சிகள் பெரியளவில் அக்கறையை காட்டாமல் விட்டாலும் கூட தற்போது அக்கறை காட்டி வருகின்ற சூழலை நாங்கள் பார்க்கின்றோம்.
முன் எப்போதும் இல்லாதவாறு வடக்குக் கிழக்கு மக்கள் இந்த பேரழிச்சியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள்.
பல்வேறு அமைப்புகளும், மலையக பேரணியில் கூடவே தாங்களும் பாதயாத்திரையில் கலந்து கொண்டு நடந்து செல்கின்ற அந்த நிலைமையை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
கடைசி நாளில் அதாவது இம்மாதம் 12-ஆம் தேதி இடம்பெறுகின்ற அந்த பாதயாத்திரையில் வடபகுதியில் இருந்து எழுச்சியாக நிறைய மக்களை ஈடுபடச் செய்து அந்த எழுச்சியை ஒரு பலமான எழுச்சியாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியை செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவை கொடுப்பதற்கு நாங்கள் அங்கம் வகிக்கின்ற சமூக விஞ்ஞான ஆய்வு மையம் முழுமையான ஆதரவை கொடுப்பதோடு அந்த நடைபவனில் நாங்களும் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பொது அமைப்புகளையும், இங்கே செயல்படுகின்ற தமிழ் தேசிய அரசியல் கட்சிகளையும், அரசு சார்பற்ற நிறுவனங்களையும், இந்த நடை பயணத்திற்கு முழுமையான ஆதரவையையும், ஒத்துழைப்பையும், வழங்குமாறு மிகவும் தாழ்மையாக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.
எழுச்சி என்பது மலையக மக்களுடைய கடந்த காலத்தை எங்களுக்கு நினைவூட்டுவதோடு எதிர்காலத்தில் மலையக மக்களுடைய அந்த நகர்வு அவர்களுடைய அந்த இலக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆயத்தப்படுத்துகின்ற நிகழ்வாகவும் இந்த பேரணி அமையும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்கின்ற போது மலையக மக்களுடைய பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்குரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டிய தேவை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது.
வடக்கு கிழக்கு மக்கள் மலையக மக்களோடு கைகோர்ப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நாம் வினையமாக வேண்டிக் கொள்கிறோம்.
மரபு ரீதியாகவே வடக்கு கிழக்கு மக்கள் மலையக மக்களோடு தங்கள் அக்கறையை காட்டி வந்திருக்கிறார்கள்.
மலையக மக்களும், வடக்கு கிழக்கு மக்களுடைய நலன்களில் அரசியல் அபிலாசைகள் மீதும் தொடர்ச்சியாக அக்கறைய காட்டி வந்திருக்கிறார்கள்.
அந்த மரவை தொடர்ச்சியாக பேணுவதற்குரிய செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு இந்த நடைபவனி அதிகம் பங்களிப்பை நல்கும் என நாங்கள் கருதுகிறோம்.
ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்குமாறு நாங்கள் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறோம். என்றார்.