![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/08/125749191_gettyimages-1224148339.jpg)
துன்னாலை மத்தி, கரவெட்டி பகுதியில், மதிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் கடந்த 01.08.2023 அன்று மோட்டார் சைக்கிள் பழகும் போது, மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞன் 02ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (07) காலை உயிரிழந்தார்.
சங்கர் சஞ்சீவன் என்ற இளைஞனே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.