
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 55 வயதான குடும்பஸ்தர் ஒருவர், தாக்கப்பட்டநிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில், 19 வயதுடைய யுவதி ஒருவருக்கும், உயிரிழந்த 55 வயதான குறித்த குடும்பஸ்தருக்கும் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மீண்டும் சுன்னாகம் பகுதிக்கு நேற்று பிரவேசித்த நிலையில், குடும்பஸ்தரை மரம் ஒன்றில் கட்டி வைத்து யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காயமடைந்த 55 வயதான நபர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததுடன், சம்பவத்தில் காயமடைந்த யுவதி சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 6 பேரை கைது செய்தனர். கைதான சந்தேகநபர்கள் 23 முதல் 48 வயதிற்கிடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.