
ஹம்பகா – கந்தானை பகுதியில் உள்ள இரசாயன மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்தார்.
தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.