
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை சேர்ச் வீதி பகுதியில் கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41வயதுப் பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 5 லீற்றர் கசிப்பு, 20 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் முன்னரும் ஒரு தடவை கசிப்புடன் கைதாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணை, மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.