
கடும்வறட்சிக்கு நடுவில் காட்டு யானைகளின் தொல்லை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்மருநகர் பகுதியில் 07.08.2023 நேற்றைய தினம் இரவு வாழ்வாதாரத்திற்காக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த வாழை தோட்டத்தினை 03 காட்டு யானைகள் 50 மேற்ப்பட்ட காயும் பிஞ்சுமாய் இருந்த வாழை மரங்களை அழித்துள்ளதுடன், பலாமரம் என்பனவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார்.
