மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிசாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பினையடுத்து ஒருவர் கல்லால் தாக்கு தலுக்குள்ளா சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதியை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் பிணையில் நேற்று திங்கட்கிழமை (7) விடுவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் வாகன சாரதிக்கும் இன்னொரு பொலிஸ் கான்ஸ்டபிள்களான தமிழ் பொலிசார் இடையே சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (6) இரவு ஏற்பட்டவாகு;குவாம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதையடுத்து வாகனசாரதி கல்லால் சக பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் காயடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்கிய பொலிஸ்சாரதியை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுவித்ததையடுத்து அவரை உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் ஒழுக்க காற்று நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.