மட்டக்களப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி காரியாலம் இருக்க வேண்டுமா? இல்லாமல் போவது என தீர்மானம் எடுக்க வேண்டியது எங்கள் கட்சி இரா.சாணக்கியன் அல்ல எனவே ஈழு விடுதலைப் போராட்டத்துக்கு எந்தவொரு சம்மந்தமும் கிடையாதவர் எமது கட்சியை பற்றி கதைப்பதற்கு அவருக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. கட்சி காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (10) இடம்பெற்ற ஊடக மாநாட்டிடில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவிடம் இரா.சாணக்கியன் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்வைத்த எந்துவொரு கோரிக்கையையும் செய்யவில்லை கட்சி காரியாலயம் தேவையா ஊழல் வாதிகள் என விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
எனவே கடந்த 1984 ம் ஆண்டு ஈழவிடுதலை போராட்டத்தில் சேர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்த நான் இன்றுவரை எந்தவொரு களங்கம் ஏற்படாமல் எனது பணியை செய்து கொண்டிருக்கின்றேன்
இருந்தபோதும் 1991ம் ஆண்டில் இருந்து ஈழமக்கள் ஜனநாயக கட்சி வடகிழக்கு மலையகம் மற்றும் புத்தளம் உட்பட பல இடங்களில் காரியாலயங்கள் நிறுவி சேவைகளை செய்து வருகின்றது. அந்த காலகட்டத்தில் சாணக்கியன்; குழந்தையாக இருந்திருப்பார் என நினைக்கின்றேன்.
காரணம் அவருக்கும் ஈழு விடுதலைப் போராட்டத்துக்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாத அவர் கொழும்பில் படித்து வெளிநாடுகளில் படிப்பை முடித்து கொண்டு பாதுகாப்பு தேடிக் கொண்டிருந்த பின்னர்; யுத்தம் முடிந்ததும்; இலங்கை திரும்பி ஸ்ரீ லங்கா சுதச்திர கட்சியில் இணைந்து பட்டிருப்பு அமைப்பாளராக செயற்பட்டுக் கொண்டு நிலையில் அந்த கட்சியில் இருந்தால் தான் நா. உறுப்பினராக முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கட்சி தாவி நா.உறுப்பினராக உள்ளார்.
அவ்வாறு நா. உறுப்பினரான பின்னர் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன செய்தார் என்பதை அவர் யோசிக்க வேண்டும் அதைவிடுத்து ஊழல் வாதிகள் என்றால் எங்கே செய்தது எப்போ செய்தது அந்த ஊழல்வாதியார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
நான் 2004 ம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக இருக்கின்றேன் எனபது அவருக்கு தெரியாதவர். ஊழல்வாதிகள் யார் என்பது எங்களுக்கு தெரியும் அவர் மௌனமாக இருக்க வேண்டும் எல்லா கட்சிகள் மீதும் பழிசுமத்திக் கொண்டு ஈழு மக்கள் ஜனநாயக கட்சி மீது வீன்பழி சுமத்துவதை எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ள முடியாது
எமது கட்சி தலைவரும் அமைச்சருமான டக்கிளஸ் 1994 யாழ் மாவட்டத்தில் 9 நா.உறுப்பினர்களை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு நா.உறுப்பினர்களை நியமித்து சமுர்த்தி தொடக்கம் அனைத்து திணைக்களங்களுக்கு நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி சேவை செய்தோம்.
நாங்கள் 91ம் ஆண்டில் இருந்து மக்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம் அவரின் காரியாலயத்துக்கு மக்கள் போவதில்லை அதன் காழ்புனர்ச்சி காரணமாக இவ்வாறு ஒரு பழிசுமத்துகின்றார்
கச்சோரி கூட்டங்களில் அநாகரிகமாக நடந்து கொண்டதை பார்த்தோம் அப்படி ஒரு அரசியல் நாகரீகம் தெரியாதவர் எல்லா இடத்திலும் வேட்டியை வீசிய மாதிரி கடைசியில் சூரைபத்தையில் வேட்டியை வீசியுள்ளார்
எங்கள் அமைச்சால் செய்ய வேண்டிய வேலைதிட்டங்களை செய்துவருகின்றேம் நா..உறுப்பினரான சாணக்கின் எதிர்ப்பு அரசியலை செய்வதால் எந்த விதமான இலாபமும் வரப்போவதில்லை எனவே அரசாங்கத்துடன் இணைந்து அவருக்கு வாக்களித்த மக்களுக்கு சேவையை செய்யவேண்டும் அதைவிடுத்து மற்றவர்கள் மீது சேறு பூசுவதும் மல்லுக்கு இழுப்பதை தவிர்த்து கொண்டு மௌனமாக இருந்து கொள்வேண்டும் என அறிவுரையாக கூறுகின்றோம் என்;றார்.