
வெள்ளவத்தை பிரட்ரிகா வீதி பகுதியில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையை சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவரை சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.