
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டிய கட்டிடங்களை நேற்று வெள்ளிக்கிழமை (11) மாகாவலி அதிகார சபையினர் பலத்து இராணுவ பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் கம்பி வேலிகள் இடித்து தள்ளியதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
வாழைச்சேனை கொழும்பு வீதியிலுள்ள நாவலடி தொடக்கம் ஜெயந்தியாலை பிரதேசம் வரையிலான ரயில் தண்டவாளத்துக்கும் வீதிக்கும் இடையிலான 28 ஏக்கர் அரச காணிகளை நாவலடி ஓட்டுமாவடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த காணி அபகரிப்பாளர் சிலர் உள்நுழைந்து காட்டு மரங்களை வெட்டி சட்ட விரோதமாக அபகரித்து அதற்கு முள்கம்பி வேலிகள் நாட்டி கட்டிடங்கள் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து இந்த சட்டவிரேத காணி அபகரிப்பு பேசும் பொருளாக மாறிய நிலையில் நேற்ற முன்தினம் வாழைசச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிசார் சென்று காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்;களிடம் இது அரச காணி இந்த காணிகளுக்கு அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிக் கொண்டு உடனடியாக வெளியேறவேண்டும் இல்லாவிடில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவே இவைகளை அகற்றிச் செல்வதற்கு 2 நாள் அவகாசம் வழங்கியிருந்ததர்.
இந்த நிலையில் மகாவலி அதிகார சபைக்கு சொநறந்த மான இந்த காணஜகளை அபகரிப்த்துள்ளமையையடுத்து சம்பவதினமான இன்று மகாவலி அதிகாரசபை பொலிசார் மற்றும் இராணவ பாதுகாப்புடன் அத்துமீறி அபகரித்து முள்கம்பி வேலி அமைத்து மற்றம் கட்டிய கட்டிடங்கள் புல்டோசர் கொண்டி இடித்து தள்ளி அவைகளை அகற்றினர்
இந்த செயற்பாட்டையடுத்து காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் எதிர்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.