
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பாரவூர்திகளுக்காக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரத்துக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, நிதி இராஜாங்கம் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.