முள்ளியவளையில் விபத்தினை ஏற்படுத்தி இளைஞன் ஒருவரை படுகாயப்படுத்திய கப் வாகனத்தில் பயணம் மேற்கொண்ட கரைதுறைப்பற்று பிரதேச பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட இருவர் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
17.09.21 அன்று இரவு தண்ணீரூற்று குமுழமுனை வீதியின் முனைப்பு குதியில் கரைதுறைப்பற்று பிரதேச ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கப் வாகனம் விபத்தினை ஏற்படுத்தியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகி;ச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை ஓட்டிய கரைதுறைப்பற்று ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மது போதையில் வாகனத்தினை ஒட்டியமை தெரியவந்துள்ளது அவர் தனக்கு பதிலாக வேறு ஒருவரை சாரதியாக பொலீசாரிடம் காட்டியுள்ளார்.
இருவரையும் கைதுசெய்த முள்ளியவளை பொலீசார் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார்கள்.
ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மது பாவித்திருந்தமை பொலீசாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அருகில் உள்ள சி.சி.கமரா காணொளி காட்சிகளை சேகரிக்கும் நடவடிக்கையிலும் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.