
ஸ்ரீநந்தகுமார் எழுதிய யோகியர் சிகிச்சை இரகசியம் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.





யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத் தலைவர் கலாநிதி. திரு. முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு, பிரதம விருந்தினராக தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன் கலந்துகொண்டார்.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத் தலைவர் கலாநிதி லிவியன் இந் நூலிற்கான ஆய்வுரையாற்றினார். இந் நிகழ்வில் கலைத்துறை சார்ந்தோர், பொதுமக்களெனப் பலர் கலந்துகெண்டனர்.