
வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை என்பன அதிகரித்துச் செல்லும் போக்குத்தான் காணப்படுகின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, போருக்குப் பின்னரும் பல்வேறு சமூக நெருக்கடிகளும் பொருளாதார நெருக் கடிகளும் தற்கொலைக்குக் காரணமாக அமைகின்றன.
சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக உளவள ஆலோசகர்கள், மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையைப் பெற வலியுறுத்தவேண்டும். அவ்வாறு பெறமுடியாதவர்கள் அபயம் – 071071 2345 என்ற தொலைபேசி சேவையி னூடாகவும் ஆலோசனையைப் பெற்று கொள்ளலாம்.
தற்கொலை செய்து கொள்பவர் அதனைச் சொல்லமாட்டார் . ஆனால், ஏதோ ஒரு வடிவில் அதனை வெளிப்படுத்துவார். நேரடியாக வெளிப்படுத்தாவிட்டா லும் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பார். அதை உணர்ந்து அவர்களுக்கு உளநல ஆலோசனையைப் பெற்றுக் கொடுக்கவேண்டும்.
நண்பர்கள், குடும்பத்தவர்கள் . உறவினர்கள் மூலமே அவர்களை அடையாளம் கண்டு ஏதாவது ஒரு வழியில் சிகிச்சைக்குக் கொண்டு வரவேண்டும் – என்றார்.