
செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவிகளின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கத்தால் உயிரிழந்த மாணவிகளுக்கு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.





