கத்தோலிக்க ஆக்கிரமிப்பின் எக்காளத்தில், ஏளனத்தில் தமிழ் அவமதிப்பின் சின்னம் ஊர்காவற்துறையில் மறவன்புலவு சச்சிதானந்தம்

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் நேற்றையதினம் (13) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பார்தொழு தேத்தும் பத்தினி (சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், நடுகற் காதை 210). கண்ணகி எனச் சொல்லாது பத்தினி என்றார் இளங்கோ.
உரைசால் பத்தினி எனத் தொடக்கத்திலேயே கூறிய இளங்கோ, காப்பியம் முழுவதும் பல இடங்களில் பத்தினி என்பார். இளங்கோ கூறிய அதே சொல். அதே பொருள். அதே தெய்வ நிலை.
இலங்கையில் ஏறத்தாழ 25,000க்கும் கூடுதலான பத்தினித் தெய்வக் கோயில்கள். கண்ணகி தமிழ்ப் பெண். 25,000க்கும் கூடுதலான விகாரைகளின் கோயில்களில் வழிபடுவோர் புத்த சிங்களவர்.
தமிழர் அல்லாத வேறொரு இனக் குழு, தமிழ்ப் பெண்ணான கண்ணகிக்கு இத்தனை கோயில்களை அமைத்து வழிபடும் மரபு உலகில் வேறு எங்கும் இல்லை.
பல நூற்றாண்டு காலப் பத்தினித் தெய்வ வழிபாட்டில் கண்ணகியைப் புத்த கண்ணகி என்றோ, சித்தார்த்த கண்ணகி என்றோ, கௌதம கண்ணகி என்றோ அவர்கள் அழைக்கவில்லை.
இளங்கோ எந்தச் சொல்லால் கண்ணகியை அழைத்தாரோ, அதே சொல்லால் சிங்களவர் ஏறத்தாழ 1800 ஆண்டுகளாகக் கண்ணகியை அழைக்கிறார்கள்.
தமிழ் மரபைப் புத்த சிங்களவர் செம்மாந்து போற்றுகிறார்கள். இன்றைய புத்த சிங்களவரின் மிகப்பெரியதான கண்டிப்  பெருவிழாவில் பத்தினியும் யானை மீதுவர்ந்து வலம் வருகிறாள் பத்தினி – கண்ணகி தெய்வமாக.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். வாள்முனையில் சைவர்களைக் கத்தோலிக்கராக மதமாற்றியவர்கள்.
கண்ணகியைச் செபத்தியான் கண்ணகி என்கிறார்கள்.
கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக இலங்கைக்குக் கொண்டு வந்து புத்தரின் தெய்வமாக்கியவன் கயவாகு (கிபி 113 135 கால அரசன்) கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் என அவனை இளங்கோவடிகளே சிறப்பித்துக் கூறுவார்.
கயவாகுவுக்கு 120 ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவன் செபத்தியான் (கிபி 233-288). தமிழுக்கும் பத்தினிக்கும் கயவாகுவுக்கும் செபத்தியானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஐரோப்பாவில் பிரான்சில் பிறந்தவன். உரோமப் பேரரசின் கொடுமையால் இறந்தவன் செபத்தியான்.
கொள்ளை நோய்களைப் போக்கினான், என்பர்.
செபத்தியானுக்கும் தமிழருக்கும் என்ன உறவு? எதுவுமே இல்லை.
தமிழர் மீதான கத்தோலிக்கப் படையெடுப்பின், கத்தோலிக்க ஆக்கிரமிப்பின், கத்தோலிக்க மேலாட்சியின் சின்னமே செபத்தியான்.
செபத்தியானின் பெயர், தமிழ் இலக்கியம் எதிலுமே இல்லை.
கத்தோலிக்க ஆக்கிரமிப்பின் அடையாளமாகச் செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு ஊர்காவற்துறையில் அமைந்திருக்கிறது.
இளங்கோ, கயவாகு, சேரன் செங்குட்டுவன், புத்தர், சைவர், தமிழர், சிங்களவர், யாவருக்கும் அவமானம் பழிச்சொல் தருகின்ற பெயரே, செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு.
சைவத் தமிழர், புத்த சிங்களவர் இரு சமூகத்தவரையும் திட்டமிட்டு எக்காளிக்க ஏளனமாக்க அவமானிக்கக் கத்தோலிக்க செபத்தியான் கண்ணகை அம்மன் தெருவை உருவாக்கி இருக்கிறார்கள்.
சைவருக்கு எதிரான தமிழருக்கு எதிரான கத்தோலிக்கரின் இன்றைய அட்டூழியமே செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு.
1998இல் சிலாவத்துறைப் பிள்ளையார் கோயில் வளாகத்துள் மரியாள் சிலை வைத்த பாதிரியார் அன்று விடுதலைப் புலிகளின் கையில் சிக்கினார். அன்றே சிலையும் இல்லை. பாதிரியாரும் இல்லை.
இன்று விடுதலைப் புலிகளில்லை. ஊர்காவற்றுறைக் கத்தோலிக்கப் பாதிரியார் கொட்டம் எத்தனை நாளைக்குத் தொடரும்? பார்க்கலாம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews