
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று (18) யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக பேரூந்தும் கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்நோக்கி பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக விசேட சேவை பேரூந்துடன் கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதியதில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.

மேலும் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுக்குள்ளானதுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.