
பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (baguette) தயாரிக்கும் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கைத் தமிழரான தர்ஷன் செல்வராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பார மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் இக் கௌரவிப்பு இடம்பற்றது.

உலகின் மிக பிரபல உணவுகளில் ஒன்றான பிரெஞ்சுப் பாண் உள்ளது. இந்தப் போட்டியில், வெற்றியாளராக இவ்வாண்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட தர்ஷன் பாரிஸில் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த ஆண்டின் பிரெஞ்சு பாரம்பரிய சுவையான பாண் தயாரித்து இவ்வாண்டுக்கான வெற்றியாளராக மாறியுள்ளார்.
126 போட்டியாளர்களில் தர்ஷன் செல்வராஜா வெற்றிபெற்றுள்ளார்.
அதேவேளை, பிரான்ஸின் அதிபர் மாளிகையான எலிசேக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பாண் வழங்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிடைத்துள்ளது.

