யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி அறிவகம் சனசமூக நிலையத்தின் 68 வது ஆண்டு நிறைவு விழா நேற்று 15/08/2023 செவ்வாய்க் கிழமை சிறப்பாக இடம் பெற்றது.
அதன் தலைவர் தங்கராசா அரவிந்தன் தலமையில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக கழக அங்கத்தவர்களுக்கான மரதன் ஓட்டம் காலை 6:00 மணியளவில் இடம் பெற்றதுடன், வெளி கழகங்களுக்கான 10. Km குறந்தூர ஓட்டம் காலை 7:00 மணியளவில் இடம் பெற்றது. வெளி கழக உறுப்பினர்களுக்கான 50.கிலோ மீட்டர் சயிக்கிள் ஓட்டப் போட்டி காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகி 10:15 மணியளவில் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து பிற்கல் 3:30. மணியளவில் அறிவகம் சனசமூக நிலைய மைதானத்தில் சிவப்பு மற்றும் பச்சை இல்லங்களுக்கான விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றன.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து விளையாட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல விளக்கு ஏற்றல், இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, என்பன இடம் பெற்றது.
தேசிய கொடியினை பருத்தித்துறை பொலீஸ் நிலைய பதில் பொறுப்திகாரி ஆர்.சேந்தன் ஏற்றியதை தொடர்ந்து கழகத்தின் கொடி, இல்லங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் செல்வி சாந்தா கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை பொலீஸ் நிலைய பதில் பொறுப்திகாரி R.சேந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தேசிய அமைப்பாளர் ஐ.சிறிரங்கேஸ்வரன் கலந்து கொண்டதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் என்பவற்றையும் வழங்கிவயட்தனர்.