
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் ஊடக வவுனியா மாவட்டத்தில் 9028 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் 25 கிலோகிராம் கொண்ட 13, 375 யூரியா பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


