
இரு வேறு குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேசிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள சுண்டி குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்ட ஜே.சி.பி இயந்திரம் ஒன்றும் அனுமதிப்பத்திரம் இன்றி உழவு இயந்திரத்தில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்களும் அதன் சாரதிகள் நால்வரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம் 15.08.2023 சுற்றி வளைக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர்கள் நான்கு பேரும் இன்றைய தினம் 16.08.2023 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.