குருந்தூரில் பொங்கலைக் குழப்பிய பிக்கு மற்றும் அதிகாரிகளுக்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரெனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத வழி பாட்டுச் சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக்கடனை செய்ய விடாது தடுத்த தொல்லியல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறியே முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டின் போது ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குருந்தூர் மலை சட்டவிரோத விகாரையின் விகாராதிபதியெனத் தன்னைக்கூறிக்
கொள்ளும் கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது