
யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் 2023 ம் ஆண்டிற்க்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் கல்லூரி அதிபர் பொ.அரவிந்தன் தலமையில் இடம் பெற்றது.
முதல் நிகழ்வாக வீதியிலிருந்து விருந்தினர்கள் பாண்ட் இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது.
தொடர்ந்து வரவேற்புரையை கல்லூரியின் உப அதிபர் கலாதேவி குகானந்தன் நிகழ்த்தினார்.

ஆசி உரைகளை கரவெட்டி மூத்த விநாயகர் ஆலய பிரதம குரு சிறிலசிறி விஸ்வநாதக்குருக்கள்,
செவ்வந்திநாதக்குருக்கள், கிறிஸ்தவ ஆசி உரையை மணல்காடு பங்குத் தங்தை ஜோன் குருசும் நிகழ்த்தினார்.
தொடர்ந்து தலமை உரையையும் அதிபர் அறிக்கையையும் பாடசாலை அதிபர் பொ.அரவிந்தன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து நிறுவுனர் உரையினை முன்னாள் வடக்கு மாகாண உதவி திட்டப் பணிப்பாளர் விஸ்வநாதக் குருக்கள் சொகதகநாதன் நிகழ்த்தியதை தொடர்ந்து கல்லூரியின் சாதனையாளர்கள் பரிசில்கள், பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு உரையினை யாழ்ப்பாண பால்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சற்குணராசா நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சற்குணராசா, முன்னாள் வடக்கு மாகாண சபை உதவி திட்டமிடல் பணிப்பாளர் விஸ்வநாதக் குருக்கள், ஹாட்லிக் கல்லூரி அதிபர், மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கல்லூரியின் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர் .





