
கிளிநொச்சியில் தனியார் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 19.08.2023 ஆம் திகதி நேற்று கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்போது பழைய பி.கே.எல்.எம்.ஜி, மற்றும் ஏகே தோட்டாக்கள் 60, செல் 5, டிக்னெட்கள் சாஜர்கள், பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


