
பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.காணி உரிமையாளர்களால் கிணறு துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.






இந்த நிலையில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி போலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர் இன்றைய தினம் 21.08.2023 நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடி படையினரால் கிணற்றில் இருந்து வெடி பொருட்களை மீட்கும் அகழ்வு பணியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பல்வேறு வகையான வெடிக்காத வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.