இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பி குழுவில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (22) மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கடந்த முறை இடம்பெற்ற 20 வயதிற்குட்பட்ட அகில இலங்கை
ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் ரன்னர் அப் கிண்ணத்தை கைப்பற்றியது.
.
இச்சுற்றத் தொடரில் மொத்தமாக 20 பாடசாலைகள் அணிகள் விளையாடுவதுடன் ஏ, பீ, சி, டி என நான்கு குழுக்களாக இப்பாடசாலைகள் பெயரிடப்பட்டுள்ளதுடன் குழுவில் உள்ள அணிகள் ஒன்றை ஒன்று லீக் சுற்றாக விளையாடவுள்ளனர்.
முதலாம் பிரிவு மட்டத்திலுள்ள அகில இலங்கை ரீதியாக மொத்தமாக 20 பாடசாலைகள் அணிகள் இச்சுற்றுத் தொடரில் பங்கேற்பதுடன் வடக்கிலிருந்து 4 அணிகளும் கிழக்கிலிருந்து 2 அணிகளும் விளையாடுவது பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது.
கிழக்கில் கிண்ணியா அல் –அக்ஸா கல்லூரியும், ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியும். வடக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென் பெட்றிக்ஸ் கல்லூரி, இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி, கிளிநொச்சி வட்டகச்சி மத்திய கல்லூரி என்பனவும் முதலாம் பிரிவில் விளையாடுகின்றன.
அகில இலங்கை ரீதியாக மொத்தமாக விளையாடும் 20 பாடசாலை அணிகளில் 13 பாடசாலைகள் தமிழ், முஸ்லிம் பாட்சாலைகள் என்பது விசேட அம்சமாகும்.